உலகம்

உலகளாவிய ரீதியில் 01 மில்லியன் குழந்தைகள் HIV/AIDS தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு!

வரலாற்று சிறப்புமிக்க HIV/AIDS நிவாரணத் திட்டமான PEPFAR (ஜனாதிபதியின் அவசரகால எய்ட்ஸ் நிவாரணத் திட்டம்)-இன் நீண்டகால எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகளாவிய நிபுணர்கள் குழு, ஆப்பிரிக்கா முழுவதும் உள்ள உள்ளூர் அரசாங்கங்களால் ஆதரிக்கப்படும் வகையில் திட்டத்தை மாற்ற ஐந்து ஆண்டு திட்டத்தை கோருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திட்டமானது (PEPFAR)  ஆதரவு நிறுத்தப்பட்டால், 2030 ஆம் ஆண்டுக்குள் மேலும் 1 மில்லியன் குழந்தைகள் HIV-யால் பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 500,000 பேர் AIDS தொடர்பான காரணங்களால் இறக்கலாம், மேலும் 2.8 மில்லியன் பேர் அனாதைகளாக மாறலாம் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

2003 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷால் இது தொடங்கப்பட்டதிலிருந்து, PEPFAR உலகளவில் 25 மில்லியன் உயிர்களைக் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்