உலகின் 25 சிறந்த விமான நிலையங்களில் முதலிடம் பிடித்த சிங்கப்பூர்

உலகின் 25 சிறந்த விமான நிலையங்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, இந்த பட்டியலில் முதல் இடத்தை ஆசிய விமான நிறுவனமான சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பெற்றுள்ளது.
உலகளவில் 565 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட நுகர்வோர் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, கத்தாரின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாகும்.
மூன்றாவது இடத்தை ஜப்பானின் டோக்கியோ சர்வதேச விமான நிலையம் பிடித்தது, இது உலகின் தூய்மையான விமான நிலையமாக பெயரிடப்பட்டது.
உலகின் சிறந்த விமான நிலைய ஊழியர்களைக் கொண்ட தென் கொரியாவின் இஞ்சியோன் சர்வதேச விமான நிலையம் 4வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஜப்பானின் மற்றொரு விமான நிலையமான நரிட்டா விமான நிலையம் 5வது இடத்தைப் பிடித்தது.
(Visited 19 times, 1 visits today)