விளையாட்டு

கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா மாற்றம்?

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப் பிறகு கேப்டன் பதவியை விட்டு ரோஹித் சர்மா நீக்கப்படுவார் என பேசப்பட்ட நிலையில், அவரது ரசிகர்களை உற்சாகமூட்டும் செய்தி வெளியாகி உள்ளது.

வரும் ஜூன் மாதம் இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் துவங்க உள்ள நிலையில், கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு, பும்ரா அல்லது வேறு ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பேசப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முக்கியமானது என்பதால் அந்த நேரத்தில் புதிய கேப்டனை நியமித்து பரிசோதனை முயற்சிகளை செய்ய முடியாது என பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சாம்பியன்ஸ் கோப்பையை வென்று உள்ளதால் அதிக தன்னம்பிக்கையுடன் ரோஹித் சர்மா உள்ளதாகவும் அதனால் அடுத்த கேப்டனை அடையாளம் காணும் வரை அவரே கேப்டனாக தொடர்வார் என்றும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ரோஹித் சர்மாவையே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு கேப்டனாக தொடரச் செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தத் தொடருக்குப் பிறகு, வேண்டுமானால் ரோஹித் சர்மாவின் செயல்பாட்டை வைத்து அடுத்த கேப்டனை தேர்வு செய்யும் முயற்சிகள் நடக்கலாம் என நம்பப்படுகிறது.

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!