அரசியல் பொழுதுபோக்கு

உதயநிதி ஆதரவில் விஜய் மகன் சஞ்சய்… பரபரப்பு பேட்டி

தமிழகத்தில் இனி அடுத்த கட்ட அரசியல் என்பது உதயநிதி vs விஜய் என்று இருக்கும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பு.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆடு பகை, குட்டி உறவு என்பது போல் ஒரு சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் திமுகவின் முக்கிய தலைவராக இருக்கும் திருச்சி சிவா மகன் சூர்யா கொடுத்திருக்கும் பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனம் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

விஜய் மூலமாகத்தான் இந்த விஷயம் நடந்திருக்கும் என்று பேசப்பட்டது. உண்மையில் ஜேசன் சஞ்சய் உதயநிதியின் ரெக்கமண்டேசனில் தான் லைக்கா நிறுவனத்தில் ஒப்பந்தமாகி இருக்கிறார் என சூர்யா சொல்லியிருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் விஜய் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதாகவும் ஏதாவது ஒரு கட்டத்தில் விஜய் மனைவி சங்கீதாவே அவருக்கு எதிராக பேச அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.

விஜய் ஆதரவாளர்கள் பலரும் இவர் உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்து வருகிறார் என சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

(Visited 33 times, 1 visits today)

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக