ஒரே மாதத்தில் 16,000 பேர் பணிநீக்கம் – உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களின் அதிரடி நடவடிக்கை

உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் கடந்த மாதம் சுமார் 16,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகளவில் பெரும் நிறுவனங்களில் பணிநீக்கச் செயல்முறை சமீபகாலமாக அதிகரித்தவாறு உள்ளது.
இந்த நிறுவனங்களை மறுசீரமைத்தல், செலவுகளைக் குறைத்தல், ஊழியர்களுக்கு பதிலாக செயல் நுண்ணறிவைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டெக் நிறுவனங்கள் பலரும் பெப்ரவரி மாதத்தில் மட்டும் சுமார் 16,000 பேரை பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மெட்டா, கூகுள், சேல்ஸ்போர்ஸ், ஆட்டோடெஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பணிநீக்கம், ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிநீக்க நடவடிக்கைகளைவிட 184 சதவிகிதம் அதிகமாகும்.
கடந்த பெப்ரவரியில் மெட்டாவில் 3.600 பேரும், ஆட்டோ டெக்கில் 1,350 பேரும், சேல்ஸ்போர்ஸில் 1,000 பேரும், ஜெஃப் பெசோஸின் விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜினில் 1,000 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.