ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் – சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ டீசர் அவுட்

சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ பாலிவுட் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியானது ‘தர்பார்’. இந்தப் படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.
5 வருடங்கள் கழித்து மீண்டும் இயக்குநர் களத்துக்குத் திரும்பியிருக்கிறார் முருகதாஸ்.
சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அடுத்த மாத இறுதியில் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)