ஆஸ்திரேலியாவில் மோசமடைந்துவரும் வெள்ளப்பெருக்கு : மூடப்பட்டுள்ள நெடுஞ்சாலை!
ஆஸ்திரேலிய மாநிலமான குயின்ஸ்லாந்தில் வெள்ளப்பெருக்கு மோசமடைந்து வருவதால், ஒரு பெரிய நெடுஞ்சாலை தடைப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட மாநிலத்தில் இதுவரை பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அணைகள் மற்றும் ஆறுகள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பல மோசமாக சேதமடைந்த நகரங்களுக்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.





