இலங்கை செய்தி

இலங்கையில் இரவு நேரத்தில் மூடப்படும் முக்கிய சாலை

கண்டி – மஹியங்கனை வீதி நேற்று மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை நாளாந்தம் மாலை 6.00 மணிமுதல் மறுநாள் அதிகாலை 6.00 மணிவரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக கண்டி – மஹியங்கனை வீதியின் கஹடகொல்லவுக்க அருகிலுள்ள 18 வளைவுப் பகுதியில் பாறைகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதன் காரணமாக இவ்வாறு மூடப்படுவதாக கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும்,”கஹட்டகொல்ல பகுதியில் உள்ள பிரதான வீதியில் தற்போது பாறைகள் வீழ்ந்துள்ளதாக தெரிவித்தார்.

பாறைகள் விழும் அபாயம் இருப்பதால், வீதியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆபத்தான பாறைகள் அகற்றப்பட்ட பிறகு வீதியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பினும், பகல் வேளைகளில் கூட வீதியில் பாறைகள் விழுவதற்கான அபாயம் காணப்படுவதால், பகலில் இந்த வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் மிகவும் அவதானமாக செயற்படவும்” என்றார்.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை