ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – நபர் ஒருவருக்கு நேர்ந்த கதி
ஜெர்மனியில் வெளிநாட்டை புர்விகமான கொண்ட இளைஞர்களிடையே மோதல் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இடம்பெற்ற மோதலில் 43 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
43 வயது,19 வயது, 24 வயதுடைய மூன்று சிரியா நாட்டை சேர்ந்தவர்கள் 19 வயதுடைய துருக்கி நாட்டு இளைஞன் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
துருக்கி நாட்டு இளைஞருடன் வந்த வேறு ஒரு நபர் 43 வயதுடைய நபரின் மீது துப்பாக்கி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த 43 வயதுடைய நபர் வைத்தியசாயைில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் கத்தி குத்துக்கு இலக்காகிய இளைஞரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பொலிஸ் நிலையத்தி்ல் சரணடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும் வன்முறைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.