இலங்கையில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் தற்போது முட்டை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டிருந்தாலும் கோழி இறைச்சியின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.
எதிர்பார்த்ததனை போன்று விலை குறைவடையவில்லை என அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முட்டை மற்றும் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரி குறைக்கப்பட்டால் இறைச்சி சார்ந்த உணவுப்பொருட்களின் விலையைக் குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
(Visited 18 times, 1 visits today)