மஹிந்தவிடம் கோடிக்கணக்கான பணத்தைப் பெற்றார் என டக்லஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், கோடிக்கணக்கான பணத்தை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் முன்னாள் உறுப்பினர் சுப்பையா பொன்னையா குற்றம் சுமத்தியுள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்தவர்களை இராணுவ வீரர்களாக அடையாளப்படுத்தி இந்த பணம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவின் காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பணத்தைப் பெற்றுக்கொண்டார்.
ஆனால் எங்களுக்கு 10,000 அல்லது 15,000 ரூபாய் வரையில் வேதனம் வழங்கினார்கள். கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் 3000 ரூபாய் சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
ஆனால் அவ்வாறு எதுவுமே சேமிக்கப்படவில்லை. வேதனம் கேட்ட சிலரை டக்ளஸ் இல்லாமல் ஆக்கியுள்ளார் என சுப்பையா பொன்னையா குறிப்பிட்டுள்ளார்.