செயலிழந்த சமூக வலைத்தளங்கள் – வழமைக்கு திரும்பியதாக மெட்டா அறிவிப்பு
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வட்ஸ்அப், த்ரெட் மற்றும் மெசஞ்சர் உள்ளிட்ட மெட்டாவின் சமூக ஊடக வலையமைப்புகளை அணுகுவதில் நேற்று சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
மெட்டா பிரச்சனைகள் தொடர்பாக 100,000க்கும் அதிகமான அறிக்கைகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் இரண்டும் எக்ஸ் வழியாக செயலிழப்பை உறுதிப்படுத்தியுள்ளன, பல பயனர்கள் மெட்டா பயன்பாடுகளை அணுக முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
இந்த பிரச்சனைகள் இங்கிலாந்து, ஆசியா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவிலும் பதிவாகியுள்ளன.
நேற்று மதியம் 01:00 மணியளவில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களை எதிர்கொள்வதால் இந்த செயலிழப்புகள் முதலில் பதிவாகியுள்ளன.
மெட்டா இந்த இடையூறுகளை ஒப்புக்கொண்டதாகவும், விரைவில் அதை மீட்டெடுக்க முயற்சிப்பதாகவும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இருப்பினும், உலகம் முழுவதும் மெட்டா சேவைகள் செயலிழப்பது இது முதல் முறை அல்ல.
மார்ச் மாதத்தில், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டன.