புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் முறையை கண்டுப்பிடித்த ஜப்பான் ஆய்வாளர்கள்!
ஜப்பானில் உள்ள ஒரு ஆராய்ச்சிக் குழு புற்றுநோய் செல்களைக் கட்டுப்படுத்தும் முறையை உருவாக்கியுள்ளது.
நோயெதிர்ப்பு நிபுணர் மசாஹிரோ யமமோட்டோ தலைமையிலான குழு நோயெதிர்ப்பு மண்டலத்தை கட்டுப்படுத்தும் சில டி செல்களின் வளர்ச்சியை மெதுவாக்குவதற்கான வழியை கண்டுப்பிடித்துள்ளது.
எலிகளை வைத்து முதலில் ஆய்வு செய்துள்ள நிலையில் அதன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் இது புற்றுநோய் உயிரணு ஆராய்ச்சிக்கான நம்பிக்கைக்குரிய அடுத்த கட்டத்தை வழங்குவதாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“இது ஆட்டோ இம்யூன் நோய்களைத் தூண்டாத ஒரு புதிய நோயெதிர்ப்பு சிகிச்சைக்கு வழிவகுக்கும், எனவே நாங்கள் மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட விரும்புகிறோம் என யமமோட்டோ தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)