செய்தி விளையாட்டு

இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடாது – ICCக்கு BCCI கடிதம்!

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 7 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த வருடம் பிப்ரவரி-19 ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தானில் நடைபெறும் என ஐசிசி தெரிவித்திருந்தது. இதற்கு அப்போதே பிசிசிஐ இந்த அறிவிப்பு வெளியானது முதல் இந்தியப் பாகிஸ்தானில் விளையாடாது என மறுப்பு தெரிவித்தது வந்தது.

மேலும், இந்திய அணியின் போட்டிகளை மட்டும் வேறு இடங்களுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை வைக்கத் தகவல்களும் வெளியானது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், இந்தியாவை விளையாட வைப்பதற்குப் பல படிகள் இறங்கி வந்தது.

உதாரணமாகப் பாகிஸ்தான் இந்தியா எல்லையில் இருக்கும் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய போட்டிகளை நடத்தலாம் எனவும் இந்திய அணியின் வீரர்களுக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் எனவும் கூறி வந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் வாரியம்), ஐசிசிக்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) கடிதம் எழுதி உள்ளனர்.

அதாவது, ‘நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்தியா அணி பாகிஸ்தான் மண்ணில் எந்த ஒரு போட்டியும் விளையாடாது எனவும் இந்திய அணியின் போட்டிகளைத் துபாய்க்கு மாற்றி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து பிசிசிஐ, ஐசிசிக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான இது போன்ற பிரச்சினை இப்போது எல்லாம் தொடங்கவில்லை, கடந்த பல வருடங்களாக இந்த இரு நாடுகளுக்கு இடையே இப்படி பிரச்சினை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த முடிவு குறித்து ஐசிசி விரைவில் அறிக்கை வெளியிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

(Visited 43 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!