கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்
கொழும்பில் 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் திங்கட்கிழமை (08) காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொலன்னாவ மாநகர சபைக்குட்பட்ட மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, எதுல் கோட்டை , நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரிய தொடக்கம் நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வீதிகளிலும் எதிர்வரும் திங்கட்கிழமை (08) நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)





