க்ரிமியாவின் எரிபொருள் முனையத்தைத் தாக்கிய உக்ரைன்!
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு உட்பட்ட க்ரிமியாவில் உள்ள எரிபொருள் முனையத்தைத் தாக்கியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் இராணுவம் தமது சமூக ஊடக பக்கத்தில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்குக் குறித்த முனையத்திலிருந்தே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்ய இராணுவத்தை வலுவிழக்கச் செய்யும் முயற்சியாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
2022 பிப்ரவரியில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான ஆக்கிரமிப்புடன் தொடங்கிய மோதலானது, தீர்விற்கான எந்த அறிகுறிகளையும் காட்டாத ஒரு மோதலாக இரு தரப்பினரும் தங்கள் விலையுயர்ந்த போரை எவ்வாறு தக்கவைப்பது என்ற சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
(Visited 4 times, 1 visits today)