செய்தி

2028ஆம் ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றால் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் திகதி நடக்கவுள்ளது. ஜனநாயகக் கட்சியின் சார்பில் துணையதிபர் கமலா ஹாரிஸும் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.

எதிர்வரும் தேர்தலில் தோல்வி கண்டால் 2028ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா என்று டிரம்ப்பிடம் கேட்கப்பட்டது.

அதற்கு வாய்ப்பு இல்லை என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் வெற்றி பெறமுடியும் என்று நம்பிக்கை வைத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி