டெலிகிராம் செயலியை பயன்படுத்த தடை விதித்த உக்ரைன்

அரசு மற்றும் ராணுவப் பணியாளர்கள், பாதுகாப்புத் துறை மற்றும் முக்கியமான உள்கட்டமைப்பு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ சாதனங்களில் டெலிகிராம் செய்தி தளத்தைப் பயன்படுத்துவதைத் உக்ரைன் அரசு தடை செய்துள்ளது.
சைபர் தாக்குதலுக்கு காரணமாக இருப்பதாக டெலிகிராம் செயலி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதன்மூலம் பயனர்களின் ரகசிய தகவல்களை எதிரி நாடுகள் திருடுவதாகவும் உக்ரைன் ராணுவ புலனாய்வு துறை கூறியது.
எனவே அரசாங்கத்துக்குச் சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்களில் டெலிகிராம் செயலியை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
(Visited 14 times, 1 visits today)