அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் – சீன உயரதிகாரிகள் பெய்ஜிங்கில் சந்திப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், சீன உயரதிகாரிகளைச் சந்தித்துப் பேச பெய்ஜிங் சென்றுள்ளார்.
நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்குமுன் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் 29ஆம் திதி வரை நடைபெறும் சந்திப்புகளில் சல்லிவனுடன் சீனாவின் உயர் அரசதந்திரி வாங் யி உள்ளிட்டோர் கலந்துபேசுவர்.
மத்திய கிழக்கு, உக்ரேன் நிலவரங்கள், தைவான், தென்சீனக் கடல் தொடர்பில் சீனாவின் உரிமை கோரல், இருதரப்பு வர்த்தகம் ஆகியவை குறித்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது.
அதிபர் பதவிக் காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் பைடன், சீனாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறார். துணை அதிபரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளருமான கமலா ஹாரிசும் அதேபோன்ற அணுகுமுறையைக் கையாள்வார் என்று கருதப்படுகிறது.ஆனால் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப், சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் பிடிவாதப் போக்கு அதிகரிக்கும் நிலையில் இத்தகைய அணுகுமுறை மிகவும் மென்மையானது என்கிறார். வல்லுநர்கள் பலரும் அவரது கருத்தை ஆதரிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமைப் (ஆகஸ்டு 27) பிற்பகல் பெய்ஜிங் சென்றடைந்த சல்லிவன், ராணுவங்களுக்கு இடையிலான பேச்சுகளை பகுதிவாரியான ராணுவக் கட்டுப்பாட்டுப் பிரிவுகளுக்கு இடையிலான பேச்சுகளாக விரிவுபடுத்த விரும்புகிறார்.மேலும், வலி நிவாரண மருந்துகளில் பயன்படும் ‘ஃபென்டனைல்’ ரசாயனத்தின் உள்நாட்டு உற்பத்தியைத் தடுக்க சீனா கூடுதல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறது அமெரிக்கா.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு தொடர்பான பாதுகாப்புத் தரநிலைகள் குறித்த புரிதலை எட்டுவதும் அமெரிக்காவின் இலக்கு.இவ்வேளையில் சந்திப்புகளின்போது, சீனாவில் உற்பத்தியாகும் பல்வேறு பொருள்கள் மீதான அமெரிக்காவின் தடை, சீன கணினிச் சில்லுத் தயாரிப்பாளர்களைக் குறிவைத்து அமல்படுத்தப்பட்ட ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் குறித்த அதிருப்தியைத் தெரிவிக்கவும் தைவான் மீதான அதன் இறையாண்மைக் கோரிக்கையை வலியுறுத்தவும் சீனா திட்டமிட்டுள்ள