ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த தலைவர்களின் சந்திப்பு குறித்த புகைப்படங்கள் வைரல்!
ஒசாமா பின்லேடனின் மரணத்திற்கு வழிவகுத்த 2011 ஆம் ஆண்டு வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற தலைவர்களின் கூட்டு சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சோதனையின் போது வெள்ளை மாளிகையில் உள்ள முக்கிய தருணங்களை புதிதாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் காணலாம்.
அல்கொய்தாவை நிறுவி 9/11 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட பின்லேடன் அமெரிக்க கடற்படை சீல்ஸ் குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்ததும் உயர் அதிகாரிகள் கைகுலுக்கியதை படங்கள் காட்டுகின்றன.
ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற உலகத் தலைவர்களை அழைத்து நடந்ததைக் கூறுவதையும் அவை காட்டுகின்றன.
தி வாஷிங்டன் போஸ்ட் ஒபாமா ஜனாதிபதி நூலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் சுதந்திரச் சட்டத்தின் கோரிக்கையின் மூலம் புகைப்படங்கள் பெறப்பட்டுள்ளன.
1 மே 2011 அன்று அதிகாரப்பூர்வ வெள்ளை மாளிகை புகைப்படக் கலைஞர்களால் எடுக்கப்பட்ட 900 க்கும் மேற்பட்ட படங்களை அமெரிக்க செய்தி சேவை வெளியிட்டுள்ளது.