இலங்கையில் இணைய விசா – அமைச்சரவை தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை

இலங்கையில் இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
(Visited 40 times, 1 visits today)