சாகர காரியவசத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்டக் குழு, அந்தக்ரகட்சியின் , பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை நீக்கி, ரமேஷ் பத்திரனவை அந்தப் பதவிக்கு நியமிக்கும் இரண்டு பிரேரணைகளை ஏகமனதாக நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.
இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இதில் மாத்தறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், தேர்தல் வேட்பாளர்கள் என சுமார் 300 பேர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் சபை அண்மையில் எடுத்த தீர்மானத்தை நிராகரித்து ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர யோசனையை சமர்ப்பித்திருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அமைச்சர் ரமேஷ் பத்திரனவை நியமித்து கட்சியை வலுப்படுத்த அவர் முன்வைத்த மற்றைய யோசனையாகும்.
இது தொடர்பான இரண்டு முன்மொழிவுகளுக்கும் பிரதிநிதிகள் கூடி கைகளை உயர்த்தி ஏகமனதாக முன்மொழிவுகளை நிறைவேற்றினர்.