3 ஆசிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவியை அறிவித்த ஐரோப்பிய ஒன்றியம்
இந்தியா, வடக்கு வங்காளதேசம் மற்றும் பிலிப்பைன்ஸில் சமீபத்திய வெள்ளத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஐரோப்பிய ஒன்றியம் யூரோ 2.4 மில்லியன் மனிதாபிமான உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிதியானது பண உதவி, உணவு, சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்திற்கான அணுகல் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிற அத்தியாவசிய சேவைகளை வழங்க உதவும்.
இந்தியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் ஹெர்வ் டெல்பின் Xல், “இந்தியா, பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்குகளுக்கு EU 2.4 மில்லியன் யூரோக்களை வழங்குகிறது.” என பதிவிட்டுள்ளார்.
நெருக்கடி மேலாண்மை ஆணையர், Janez Lenarcic, இந்த ஆண்டு பருவமழையின் தொடக்கத்தில் இந்த பிராந்தியங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தனது உதவியை முடுக்கிவிட்டதாக தெரிவித்தார்.