6 தசாப்தங்களுக்குப் பிறகு சீனாவில் மிக மோசமான வெள்ளம்
கடந்த ஆறு தசாப்தங்களில் இல்லாத வகையில் இந்த ஆண்டு சீனா மிக மோசமான வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளது.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தென் சீனாவில் தொடங்கிய கனமழை படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் பரவியது.
கிழக்கு சீனாவில், சமீபத்திய மழையால் பெரிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் குறைந்தது 242,000 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சமீபத்திய மழைப்பொழிவு மற்றும் வெள்ளம் ஆகியவை அதிகாரிகள் “போர்க்கால” அவசரநிலை என்று அழைப்பதை உருவாக்கியுள்ளதால் இதன் தாக்கத்தை கற்பனை செய்யலாம்.
பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் அவர்களுக்கு உதவி செய்வதிலும் சீன அதிகாரிகள் கடும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் காணப்படுகின்றது.
2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வீடுகளுக்குள் புகுந்து பயிர் சேதம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களும் இம்முறை வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உறுதி செய்யப்படவில்லை.
ஏப்ரலில், சீனாவின் அவசர மேலாண்மை அமைச்சகம், கனமழை மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டது.
சீனாவில் உள்ள முக்கிய ஆறுகள் அபாய அளவைத் தாண்டி ஓடத் தொடங்கியதை அடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது.
யாங்சே மற்றும் பிற ஆறுகளில் மேலும் உயரும் நீர்மட்டம் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது