T20 உலகக்கோப்பை தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு

இந்த ஆண்டு T20 உலகக்கோப்பை போட்டிகளை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது.
ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய T20 உலகக்கோப்பை ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த உலகக்கோப்பைக்கான மொத்த பரிசுத்தொகையாக 93.5 கோடியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு 20.36 கோடி பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரன்னர் அப் அணிக்கு 10.36 கோடி பரிசுத்தொகையாகும்.
செமி பைனலில் தோற்கும் அணிகளுக்கு 6.54 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும்.
இதுவரை நடைபெற்ற T20 உலககோப்பைகளில் அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகைகளில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்கு மொத்தமாக 46.54 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
(Visited 39 times, 1 visits today)