சிங்கப்பூரில் வீட்டு விலைகள் தொடர்பில் அரசாங்கம் முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது. சிங்கப்பூரில் சமூகப் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தக் கூடுதல் முயற்சிகள் எடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஹலிமா யாக்கோப் உறுதி அளித்துள்ளார். அவை வாழ்க்கையில் ஏற்படக்கூடிய இடையூறுகளையும் பின்னடைவுகளையும் கையாள சிங்கப்பூரர்களுக்கு உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரர்களுக்கு, குறிப்பாக முதல்முறை வீடு வாங்குவோருக்குப் பொது வீடமைப்பு கட்டுப்படியான விலையில் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் தொடர்ந்து முயன்று வருகிறது. அதிகமான மூத்தோர் தங்கள் வீடுகளிலேயே மூப்படைய வகை செய்வது, HealthierSG திட்டம் முலம் நோய்த்தடுப்புப் பராமரிப்பை மேம்படுத்துவது ஆகியவையும் அதில் அடங்கும். கொரோனா சூழலுக்குப் பிறகும் ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க அரசாங்கம் திட்டமிடுவதாக அதிபர் ஹலிமா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இன்று வரை பல நாடுகளில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் சீனாவில் பறவை காய்ச்சலுக்கு (H3N8) முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. குவாங்டாங் மாகாணம் ஜாங்ஷான் நகரை சேர்ந்த 58 வயது பெண்ணுக்கு பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீனாவில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த பெண் நோய் பாதிப்புக்கு உள்ளாவதற்கு முன்பு ஒரு கோழிபண்ணைக்கு சென்றார் என்றும் அங்கு சேகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் மாதிரிகளில் பறவை காய்ச்சலுக்கு சாதகமான வைரஸ்கள் இருந்ததும் கண்டறியப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சீனாவில் பறவை காய்ச்சலுக்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு ஆகும்.
H3N8 வைரஸ் மனிதர்களுக்கும் பரவுவது கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு உறுதிப்படுத்தப்பட்டது.