பீகார் ஷெரீப்பின் பழமையான மதரசா அஜிசியா மர்ம நபர்களால் எரிக்கப்பட்டுள்ளது.
110 வருடங்கள் பழமையான மதரசா அஜிசியாவில் சுமார் 4500கும் மேற்பட்ட புத்தகங்கள் இருந்ததாகவும், இவ்வாறு எரிக்கப்பட்ட போது பல முக்கியமான, வேறெங்கும் கிடைக்காத புத்தகங்களும் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் மதரசா அஜிசியாவின் பூட்டை உடைத்து வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த வன்முறை தொடர்பாக 77 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர். அத்துடன் அப்பகுதியில் CrPC பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மாவட்டத்தில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த 48 மணிநேரத்திற்கு தடை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)