பச்சைக் குத்தினால் 5 பக்க விளைவுகள் ஏற்படலாம்!
சிலருக்கு டாட்டூ போடும் போது பயன்படுத்தப்படும் பச்சை மை, சிவப்பு மை ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். இதனால் பச்சை குத்தப்பட்ட இடத்தில் அரிப்பு ஏற்படும்.
டாட்டூ போடும் போது முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால் தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.
பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் வைரஸ் தொற்றுகள் முதல் பாக்டீரியா தொற்றுகள், வித்தியாசமான காசநோய், தொழுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
உடலில் சில இடங்களில் டாட்டூ போடும் போது எரிச்சல் ஏற்படலாம். மேலும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் போது அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் சரியான முடிவுகள் வராது.
அதிகமாக டாட்டூ போடும் போது தோல் மெலிதல், தோலில் புண், வடுக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் அழற்சி ஏற்படும் அபாயமும் உள்ளது.
டாட்டூ போடும் முன்பு நம்பகமான கடைகளை தேர்வு செய்வது நல்லது. டாட்டூ போடுவதற்கு முன்பு போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை எடுத்து கொள்ள கூடாது.