கொழும்பில் முக்கிய பாடசாலைகளுக்கு அருகில் 40 மரங்கள் அபாய நிலையில்

கொழும்பில் சில முக்கிய பாடசாலைகளுக்கு அருகில் 40 மரங்கள் அபாய நிலையில் இருப்பதாக கொழும்பு மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்து சேவை சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை வாகனங்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றனர்.
(Visited 11 times, 1 visits today)