4-2-8-2 சுவாசப் பயிற்சி – எப்படி உதவுகிறது?
யோகா மற்றும் நினைவாற்றல் பயிற்சியாளர்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க ஒரு உத்தியாக, ஒருவரின் சுவாசத்தில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைக்கின்றனர். இதைப் பற்றிய மருத்துவ ஆய்வுகள் குறைவாக இருந்தாலும், சமூக ஊடகங்களில் பல்வேறு சுவாச முறைகள் மற்றும் நுட்பங்கள் உள்ளன.
அதில், இதயத் துடிப்பைக் குறைப்பதாகக் கூறப்படும் 4-2-8-2 பிராணயாமா சுவாச முறை, உங்கள் கவனத்திற்குத் தகுதியான ஒன்று.
பிராணயாமா மற்றும் இதயத் துடிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.
நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமாரின் கூற்றுப்படி பிராணாயாமம் அல்லது யோக சுவாசம், வேகமான இதயத் துடிப்பைக் குறைப்பது உட்பட பல உடல்நலம் தொடர்பான நன்மைகளை விளைவிக்கிறது.
பிரணயாமாவை தொடர்ந்து பயிற்சி செய்வது சிஸ்டாலிக், டயஸ்டாலிக் ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் மனதை அமைதிப்படுத்துகிறது, என்று டாக்டர் குமார் கூறினார்.
பிராணயாமா கவனம் மற்றும் செறிவை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக சிறந்த அறிவாற்றல் செயல்பாடுகள் கிடைக்கும். பிராணயாமாவின் நன்மைகள் இளையவர்கள் மற்றும் வயதானவர்களிடம், சாதாரண எடை மற்றும் அதிக எடை கொண்டவர்களிடமும் காணப்படுகின்றன.
ஆஸ்துமா மற்றும் சிஓபிடி போன்ற நுரையீரல் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் பிராணயாமா பயிற்சி செய்த பிறகு சுவாச செயல்பாடுகளில் முன்னேற்றத்தைக் காண்கிறார்கள்.
4-2-8-2 சுவாச முறை
4-2-8-2 சுவாச முறை (box breathing அல்லது square breathing) ஒரு எளிய மற்றும் கட்டமைக்கப்பட்ட சுவாச நுட்பமாகும், இது மூச்சை உள்ளிழுப்பது, மூச்சைப் பிடித்து, வெளிவிடுவது, பின்னர் மூச்சை மீண்டும் பிடித்துக் கொள்வது ஆகும்.
எப்படி செய்வது?
1. 4 எண்ணிக்கையில் உள்ளிழுக்கவும்.
2. 2 எண்ணிக்கைக்கு மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
3. 8 எண்ணிக்கைக்கு மூச்சை வெளிவிடவும்.
4. 2 எண்ணிக்கைகளுக்கு உங்கள் மூச்சை மீண்டும் பிடித்துக் கொள்ளுங்கள்.
இந்த சுவாச முறை பயனுள்ளதா?
இந்த சுவாச முறையானது தளர்வை ஊக்குவித்தல், மன அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் கவலையை போக்க உதவுதல் ஆகியவற்றில் அதன் சாத்தியமான நன்மைகளுக்காக அடிக்கடி ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த நுட்பத்தின் கட்டமைக்கப்பட்ட முறை நரம்பு மண்டலத்தில் அமைதியான விளைவை ஏற்படுத்தக்கூடும், மேலும் ஒவ்வொரு சுவாச சுழற்சியின் போதும் கவனம் செலுத்துவது மன அழுத்தத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப உதவும், என்று டாக்டர் மஞ்சுஷா (senior consultant, internal medicine, Global Hospitals Parel Mumbai) அகர்வால் கூறினார்.
டாக்டர் அகர்வாலின் கூற்றுப்படி, கட்டமைக்கப்பட்ட சுவாச நுட்பங்கள் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்க உதவும் என்று கூறும் ஆய்வுகளின் ஆதாரங்கள் மற்றும் சில ஆதரவுகள் இருந்தாலும், தனிப்பட்ட பதில்கள் மாறுபடலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
மனநலக் கவலைகளுக்கான தனித்த தீர்வுகளைக் காட்டிலும் சுவாச நுட்பங்களை பகுதியாக அணுகுவது முக்கியம்.
நீங்கள் நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம் அல்லது பிற மனநலப் பிரச்சினைகளைக் கையாளுகிறீர்கள் என்றால், பொருத்தமான வழிகாட்டுதலுக்காக ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பது நல்லது என்று டாக்டர் அகர்வால் கூறினார்.