ஆசியா செய்தி

UAE விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 26 வயது இந்திய வம்சாவளி மருத்துவர்

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில் இலகு ரக விமானம் ஒன்று பயணித்தது. அப்போது, அது விபத்தில் சிக்கியதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 26 வயது டாக்டர் சுலைமான் அல் மஜித் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

இணை விமானியாக சுலைமான் இருந்துள்ளார். அவருடன், பாகிஸ்தானை சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் சென்றுள்ளார். 2 பேரும் விமான விபத்தில் பலியாகி விட்டனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்து வளர்ந்தவரான சுலைமான், அவருடைய குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கும் ஆவலில் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.

அவருடைய தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோர் விமானம் நிறுத்தும் கிளப்பில் இருந்தனர். விமானம் எப்படி பறக்கிறது என்று பார்வையிட்டனர்.

சுலைமான் வந்த பின்னர், அவருடைய இளைய சகோதரர், அடுத்து செல்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. அதற்குள் விபத்தில் மஜித் இறந்ததும் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர்.

(Visited 40 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி