இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக 15 சந்தேக நபர்களுக்கு சிறை தண்டனை : துருக்கிய நீதி அமைச்சர்
இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 34 பேரில் 15 பேரை விசாரணைக்காக சிறையில் அடைக்க இஸ்தான்புல்லில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்று துருக்கியின் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்
துருக்கியில் வசிக்கும் வெளிநாட்டினரை “உளவு பார்த்தல்” மற்றும் “பின்தொடர்வது, தாக்குவது மற்றும் கடத்துவது” உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபர்கள் செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டனர்.
நீதி அமைச்சர் யில்மாஸ் துங்க் ஒரு சமூக ஊடக பதிவில், இஸ்ரேலிய உளவுத்துறை சார்பாக “அரசியல் அல்லது இராணுவ உளவு” செய்த குற்றச்சாட்டின் பேரில் 26 சந்தேக நபர்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டதாக கூறினார். 11 பேர் நீதிக்கட்டுப்பாட்டு நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர் மற்றும் எட்டு பேர் நாடுகடத்தலுக்கு காத்திருந்தனர்.
இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு நிறுவனமான மொசாட் துருக்கியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாலஸ்தீனியர்கள் மற்றும் சிரிய பிரஜைகளை துருக்கிக்குள் சேர்த்துள்ளதாக அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.