அமெரிக்காவில் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாநிலத்தில் அதிகளவிலான பனிப் பொழிவு காரணமாக சுமார் 100 வாகனங்கள் மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
மிச்சிகன் (Michigan) மாநில காவல்துறை, I-196 வழித்தடத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் இல்லை.
விபத்துக்கு முன்பு மணிக்கு 32-40 கிமீ வேகத்தில் சாலைகளில் பனி கொட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது சாலைகளில் உள்ள பனியை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை குறித்த பகுதியில் வெப்பநிலை -22 பாகை செல்சியஸாக பதிவாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





