நியூசிலாந்தில் நிலச்சரிவு – 02 பேர் பலி, பலர் மாயம்!
நியூசிலாந்தில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டுபேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகால குழுவினர் தற்போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முதல் நிலச்சரிவு இன்று அதிகாலை 4.50 மணியளவில் நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள வெல்கம் பே (Welcome Bay) என்ற இடத்தில் பதிவானது.
மவுண்ட் மவுங்கானுய் (Mount Maunganui) அடிவாரத்தில் இரண்டாவது நிலச்சரிவு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை விடுமுறை பூங்கா அமைந்துள்ளதால் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்தி





