சிங்கப்பூரில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தையின் சடலத்தால் அதிர்ச்சி
சிங்கப்பூர் – ஹவ்காங் வட்டாரத்திலுள்ள வீடமைப்பு வளர்ச்சிக்கழக புளோக் ஒன்றின் ஓரத்தில் ஒரு குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை இதனை தெரிவித்துள்ளது.
நேற்று காலை 11 மணிவாக்கில் ஹவ்காங் அவென்யூ 1இல் இருக்கும் புளோக் 166இலிருந்து படையின் உதவி நாடி அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு அதிகாரிகள் ஒரு குழந்தையின் சடலத்தைக் கண்டெடுத்தனர்.
குழந்தை இறந்து விட்டதாகப் படையின் மருத்துவ உதவியாளர் உறுதிசெய்தார்.
18 வயதுப் பெண் பொலிஸ் விசாரணையில் உதவிவருவதாகத் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் மரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வகைசெய்யப்பட்டுள்ளது.





