சவுதி அரேபியாவில் சிக்கி தவிக்கும் இலங்கைப் பெண்! கணவன் வெளியிட்டுள்ள கோரிக்கை
சவுதி அரேபியாவில் மனித கடத்தலில் சிக்கி வீடு ஒன்றில் சித்திரவதைக்கு உள்ளாகி வரும் 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயை இலங்கைக்கு அழைத்து வருமாறு அவரது கணவர் வட்டேகெதர ஷிரந்த மதுஷங்க திலகரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் கம்பளை நகரில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கம்பளை , பஹல வத்தஹேன, அகுருமுல்ல பகுதியைச் சேர்ந்த அமு ஹெனகெதர சச்சினி மதுஷானி குணசேகர என்ற தனது மனைவியை சவுதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப்பெண்ணாக அனுப்பியதாக கணவர் கூறுகிறார்.அவரது உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் மற்றும் தாக்குதல் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்டிய அவர், இந்த தாக்குதல்களால், அவரது அந்தரங்க உறுப்புகளில் இருந்து தொடர்ந்து இரத்தம் வெளியேறுவதாகவும் தெரிவித்தார்.
அடிக்கடி தலையில் அடிபடுவதால், உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகவும், உணவு கூட கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.இவர்களுக்கு 3 வயதுக்குட்பட்ட ஒரு குழந்தையும், பதினொரு வயதுடைய பாடசாலை செல்லும் சிறுவனும் உள்ளதாகவும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக திலகரட்ண வீட்டிலேயே இருக்க வேண்டியிருப்பதால், இந்தக் குழந்தைகளுக்கான உணவைக் கூட தேடமுடியவில்லை என்றும் திலகரத்ன கூறுகிறார்.