இந்தியாவிற்கு வருகை தரும் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்!
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்சுக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பிரெஞ்சு வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பில், மக்ரோனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த விஜயத்தின்போது டெல்லியில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் அவர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய தெற்கு அமைப்பு நடத்தும் முதல் AI உச்சிமாநாடாக இது இருக்கும் எனக் கூறப்படுகிறது.





