ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்த 100,000 பேரின் நிலை
ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் மற்றும் புகலிடம் கோரி விண்ணப்பித்த கிட்டத்தட்ட 100,000 பேர் இன்னும் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் 72,875 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அவர்கள் நாடு கடத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 39,625 பேர் தங்கள் கோரிக்கைகள் மீதான முடிவுக்காக காத்திருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2014 மற்றும் 2019 க்கு இடையில் அரசியல் தஞ்சம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 80,000 ஐ தாண்டியுள்ளது.
இதற்கிடையில், தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கத்தின் மெத்தனமான கொள்கையினால் கடந்த ஆண்டில் 13,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் விமானம் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு வந்துள்ளதாக லிபரல் கூட்டணி குற்றம் சுமத்தியுள்ளது.
எவ்வாறாயினும், கிட்டத்தட்ட 140,000 புகலிட விண்ணப்பங்களை பரிசீலிப்பதில் ஸ்காட் மோரிசன் நிர்வாகத்தின் தாமதம் தாமதத்திற்கு முக்கிய காரணம் என்று தொழிற்கட்சி வலியுறுத்துகிறது.