யாழில். முரல் மீன் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த இளைஞன் முரல் மீன் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குருநகர் பகுதியை சேர்ந்த மைக்கல் டினோஜன் (வயது 29) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பண்ணை கடலில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை முரல் மீன் இளைஞனின் கழுத்து தாக்கியதில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது
இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
(Visited 52 times, 1 visits today)