மின்சார வாகன கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள்-தேசிய அளவிலான கருத்தரங்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே பென்னலூரில் இயங்கி வரும் ஶ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக மின்சார வாகன கட்டமைப்பு மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய பயிலரங்கம் நேற்று துவங்கியது.
புது டெல்லியில் இயங்கிவரும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் ஸ்விட்ச் மொபிலிடி நிறுவனத்தின் தலைவர் ஓம் குமார் கலந்துகொண்டு மின்சார வாகன உற்பத்தியில் உலக அளவில் மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் செய்யப்பட உள்ளன.
மின்சார வாகன ஆலை நிறுவுதல் மற்றும் மேம்படுத்துதலுக்காக 515 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது. மின்சார வாகன உற்பத்தியின் சீனா, ஜப்பான் மற்றும் கொரியா 90 சதவீதத்திற்கும் அதிகமாக உற்பத்தியாளர்களை கொண்டுள்ளது என தெரிவித்தார்.
மின்சார வாகன தயாரிப்பில் நாட்டில் முன்னணி நிறுவனங்களான வேலியோ மற்றும் சிம்சன் நிறுவனங்களில் பணிபுரியும் நிபுணர்களாலும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளால் கருத்தரங்கம் பயிற்றுவிக்கப்படுகிறது.
மேலும் இக்கருத்தரங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.