சூடான் தலைநகரில் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு!
உள்நாட்டு மோதலால் சூடான் தலைநகர் கார்டூமில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற இராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால், கார்டூம் நகரமே போர்க்களமாக மாறியது.
குடியிருப்பு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
பல பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறைந்தளவே உணவு பொருட்கள் கிடைப்பாதால், வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படுமோ என மக்கள் அஞ்சுகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)





