சிங்கப்பூரில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்!
சிங்கப்பூரில் மக்கள் வசிப்பதற்கு மேலும் உகந்த நகரமாகச் மாற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
ஜனாதிபதி உரையின் பிற்சேர்க்கையில் போக்குவரத்து அமைச்சு அதன் திட்டங்களை வெளியிட்டது.
அமுல்படுத்தப்படவுள்ள மாற்றங்களுக்கமைய, அனைவரையும் உள்ளடக்கும் வகையில் போக்குவரத்து வசதிகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல்களில் அந்த அம்சம் முக்கிய இடம் பிடித்ததாக அமைச்சு தெரிவித்தது.
மேம்பாலங்களில், குறிப்பாக மூத்தோருக்கும் எளிதாக நடமாட இயலாதோருக்கும் வசதியாக மின்தூக்கிகள் அமைக்கப்படுகின்றன.
தற்போது 77 மேம்பாலங்களில் அந்த வசதி உள்ளது. எனினும் அது போதுமானதாக இல்லை.
ஆகையால் சிங்கப்பூர் முழுதும் உள்ள மேலும் 30 பாலங்களில் அரசாங்கம் மின்தூக்கிகளைக் கட்டுகிறது.
மேலும் 110 பாலங்கள் பிறகு மாற்றியமைக்கப்படும். நடப்போருக்கு வசதியாக மேலும் பல அம்சங்கள் அறிமுகம் செய்யப்படும்.