சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் ஷாப்பிங் மாலுக்கு வெளியே படிக்கட்டுகளிலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தேவேந்திரன் சண்முகம் எனும் 34 வயது இந்திய வம்சாவளி இளைஞர், கடந்த மாதம் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கான்கார்ட் ஷாப்பிங் மாலில் படிக்கட்டுகளிலிருந்து மற்றோரு நபரால் கீழே தள்ளிவிடப்பட்டார்.அவர் பின்புறமாக விழுந்ததில் அவரது மண்டை ஓட்டில் பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.ஆனால், 10 நாட்கள் கழித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவர் நேற்று (07) மாலை மாண்டாய் மயானத்தில் தகனம் செய்யப்பட்டார்.
தேவேந்திரனை தள்ளிய முஹம்மது அஸ்ஃபரி அப்துல் கஹா (27) என்பவர் வேண்டுமென்றே படிக்கட்டிலிருந்து அவரை கீழே தள்ளியதாக்க கூறப்படுகிறது. சம்பவம் நடந்த மறுநாள் அவர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.சம்பவத்திற்கு முன் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தநாரா என்பது தெரியவில்லை.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், முஹம்மது அஸ்ஃபரிக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படி அல்லது அபராதமும் விதிக்கப்படலாம்.அவர் ஏற்கெனெவே வேறொரு குற்றத்திற்காக சிறையில் இருந்தவர் என்பதால், இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் 178 நாட்கள் வரை கூடுதல் சிறைத்தண்டனையை சந்திக்க நேரிடும்.
ஒரு கைதி தனது தண்டனையின் ஒரு பகுதியை சிறைக்கு வெளியே கழிக்க அனுமதிக்கும் ஒரு நிவாரண உத்தரவு வழங்கப்படுகிறது. அந்த வகையில் அவர் வெளியே இருந்த நேரத்தில் இப்படியொரு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.