Site icon Tamil News

உடைந்த போத்தலை கொண்டு தமிழகத்தில் பொலிசாரை தாக்கிய இலங்கை அகதி

நெடுஞ்சாலையில் உடைந்த பியர் போத்தலால் இந்திய காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய இலங்கை அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தில் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் இருந்த ராபின்சன் என்ற 32 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டார்.

முகாமுக்கு அருகில் உள்ள தொழிற்சாலையில் இரும்பை திருடுவதற்காக காவலாளியாக பணிபுரிந்த முதியவரை சந்தேக நபரான ராபின்சன் மற்றும் அவரது சகாக்கள் சிலர் தாக்கியதாகவும், அவர் கீழே விழுந்ததில் பல கிலோ இரும்புகள் திருடப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு வந்த காவல்துறை அதிகாரிகளை தாக்கியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த ராபின்சன் என்ற சந்தேக நபர் குடிபோதையில் அரை நிர்வாணமாக பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர் மற்றும் அவரது சகாக்கள் பலருக்கு திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பல இருப்பதாகவும் அந்த ஊடகச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

 

Exit mobile version