பெண்ணின் உடலில் ஊர்ந்து செல்லும் ஒட்டுண்ணி புழுக்கள் தொடர்பில் அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.
தென்கிழக்காசியாவின் இந்தோசீனக் குடாவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நாடு வியட்நாம். இந்த நாட்டில் ஹனோயின் புறநகரில் உள்ள அன் பின் கம்யூனைச் சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பச்சை ரத்தம் மற்றும் டைட் கேன் எனப்படும் உள்ளூர் சுவையான உணவை சாப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அவருக்குத் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் தோலில் ஒட்டுண்ணிகள் ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. இதையடுத்து அந்த ஒட்டுண்ணி புழுக்கள் அவரது மூளைக்கும் சென்றது.
இதனால், அந்த பெண் தலைவலியால் அவதிப்பட ஆரம்பித்தார். பலமுறை சுயநினைவையும் இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு முதலில் பக்கவாதம் ஏற்பட்டதாக நினைத்து சிகிச்சை அளித்தனர்.
இருப்பினும், அவருக்கு சில ஸ்கேன்கள் எடுத்துள்ளனர். அதில், அந்த பெண்ணின் தோலுக்கு கீழ் ஒட்டுண்ணி புழுக்கள் ஊர்ந்து சென்றன. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு உடன்பெ சிகிச்சை அளிக்க ஆரம்பித்துள்ளனர். தற்போது அந்த பெண் நலமாக உள்ளார்.