ஆஸ்திரேலியாவில் வங்கி அட்டை மோசடியால் பல பில்லியன் டொலர்களை இழக்கும் மக்கள்
வங்கி அட்டை மோசடியால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியர்கள் இழந்த தொகை ஒரு பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளதாக மற்றொரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதன்படி, ஒருவரால் மோசடி செய்யப்பட்டுள்ள பணத்தின் சராசரி தொகை 299 டொலர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1058 பேரை பயன்படுத்தி நடத்திய சர்வேயில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, கடந்த 12 மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது கடன் அட்டை அல்லது டெபிட் அட்டை மோசடியில் சிக்கியவர்களின் சதவீதம் 17 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 மாதங்களில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஏறக்குறைய 34 லட்சம் பேர் ஒருவித வங்கி அட்டை மோசடிக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.
இவர்களில் பெரும்பாலோர் 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் அதன் சதவீதம் 27 சதவீதமாகும்.
(Visited 4 times, 1 visits today)