கட்டப்பஞ்சாயத்தில் கத்தி குத்து வி.சி.க பிரமுகர் படுகொலை
சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற மண்டக்குட்டி ரமேஷ் ஆவார். ரமேசுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. ரமேஷ் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார்.
இவர் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி ஆல்கடத்தல் அடிதடி உள்ளிட்ட 8 வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் சென்னை காவல்துறையில் ஏ கேட்டகிரி ரவுடி ஆவார். இந்த நிலையில் இன்று காலை கேகே நகர், பாரதிதாசன் காலனி பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே டீ குடித்துக் கொண்டிருந்தபோது காரில் வந்த அடையாளம் தெரியாத இரு மர்ம நபர்கள் இவரை சராமாரியாக வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரமேஷ் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ரியல் எஸ்டேட் தொடர்பன கட்டப்பஞ்சாயத்து செய்து வந்துள்ளார். இதனால் பலருடன் முன்விரோதம் இருந்து வந்துள்ளாதக கூறப்படுகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமேஷ் கொலை செய்யபப்ட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலை செய்துவிட்டு தப்பியோடிய இருவரை போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்.