அவுஸ்திரேலியாவில் கொலைக் குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது
கான்பெர்ரா மிருகக்காட்சிசாலையில் உள்ள சமையல் அறையில் சக பெண் சக ஊழியரை கத்தியால் குத்தியதாகக் கூறப்படும் வழக்கில், இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்த ஒரு சமையல்காரர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
29 வயதான ஜூட் விஜேசிங்க திங்கட்கிழமை இரவு கைது செய்யப்படதுடன், தன்னைத் தானே குத்திய காயங்களுடன் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்டவர் 29 வயதான பூட்டான் நாட்டவர் என்பதை News.com.au உறுதிப்படுத்துகிறது. விஜேசிங்க மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதை ATC பொலிஸ் செவ்வாய்க்கிழமை பிற்பகல் உறுதிப்படுத்தியது.
“நேற்று தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 29 வயதுடைய நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
“அந்த நபருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது, அடுத்ததாக 4 ஏப்ரல் 2023 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.”
இதுவரை அடையாளம் காணப்படாத பெண், தேசிய மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வளத்தில் உள்ள வணிக சமையலறையில் மதியம் 12.50 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அவுஸ்திரேலியாவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.