உக்ரைன் தாக்குதல் தொடர்பில் இரகசியம் காக்கும் ஜெலென்ஸ்கி..!
உக்ரைனில் படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர் தாக்குதல் நடவடிக்கைகளை உக்ரைன் படைகள் மேற்கொண்டு வருவதாகவும், ஆனால் அது தொடர்பான எவ்வித தகவல்களையும் வெளிப்படையாக வழங்க முடியாது எனவும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும், “உக்ரைனின் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் ஐந்து பேருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கின்றேன்” எனவும் ஜெலென்ஸ்கி இதன்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி, உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் உக்ரைன் படைகள் பல்வேறு வெற்றிகளை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், எதிர் தாக்குதல்களை அடக்குவதில் தமது படைகள் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது