கனடாவில் பற்றி எரியும் காட்டுத்தீ : தீயணைப்பு வீரர்களை பணியில் அமர்த்துவதில் சிக்கல்!
கனடாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், தீயணைப்பு வீரர்களை பணியில் அமர்த்துவது கடினமாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணமானது காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் இறுக்கமான தொழிலாளர் சந்தைகள் மற்றும் வேலையின் கடினமான தன்மை காரணமாக தீயணைப்பு வீரர்களை ஆட்சேர்ப்பு செய்வது கடினமாகி வருகிறது என்று மாகாண அதிகாரிகள் கூறுகின்றனர்.
வரம்புக்குட்பட்ட வளங்கள் கனடாவின் தீயை அணைக்கும் திறனை அச்சுறுத்தலாம் எனவும், காலநிலை மாற்றத்தின் விளைவாக எதிர்காலத்தில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது சமூகங்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் அதேநேரம், நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்க மற்றும் மரத் தொழில்களை சீர்குலைக்கும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே கனடாவில் சுமார் 5,500 வனப்பகுதி தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். இருப்பினும் வேலையின் கடின தன்மை காரணமாக பணியாளர்களை தக்கவைப்பதில் பல சிரமங்கள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.